/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை வரத்து உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
பசுந்தேயிலை வரத்து உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 17, 2025 09:06 PM
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில், ஓரளவு மழை பெய்த நிலையில், பசுந்தேயிலை வரத்து, படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி செய்தாலும், அதிக பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பசுந்தையிலை, 20 முதல், 23 ரூபாய் வரை, தரத்திற்கு ஏற்ப கிடைத்து வருகிறது.
தொழிலாளர்களின் கூலி உயர்வு, இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. கடந்த காலங்களை காட்டிலும், 20 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைப்பது ஓரளவு ஆறுதலாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாவட்டத்தில் சுமாரான மழை பெய்துள்ள நிலையில், தேயிலை தோட்டங்களில் ஈரத்தன்மை சிறிது  அதிகரித்துள்ளது. இதனால், அரும்புகள் துளிர் விட்டு, பசுந்தேயிலை வரத்து, படிப்படியாக உயர்ந்து வருகிறது. விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

