/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயிலில் பயணியர் கூட்டம் அதிகரிப்பு
/
ஊட்டி மலை ரயிலில் பயணியர் கூட்டம் அதிகரிப்பு
ADDED : மார் 15, 2024 11:25 PM

ஊட்டி:ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது .
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுவாக மலை ரயிலில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் வரும் போது, ஹில்குரோவ், குன்னுார் மற்றும் ஊட்டி வரை இயற்கை காட்சிகள் மற்றும் 16 குகைகள் உள்ளன.
இங்குள்ள இயற்கை காட்சிகளை காண சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று, ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நியைலில், இம்மாதம், 29 ம் தேதியில் இருந்து சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

