/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி பூங்காவில் சிறுவர் கூட்டம் அதிகரிப்பு
/
கோத்தகிரி பூங்காவில் சிறுவர் கூட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 29, 2025 10:45 PM

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் அமைந்துள்ள, சிறுவர் பூங்காவில், மழலைகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் ஒரு பகுதியில், சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக, இப்பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் நிர்வகித்துவரும் இப்பூங்காவை, பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி, பூங்கா புல்தரை, நடைப்பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏதுவாக, பாத்திகளில் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நகர மக்கள் பொழுது போக்குவதற்காக இந்த பூங்காவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை நாட்களில் பூங்காவில் பள்ளி மாணவர்கள் உட்பட, சிறுவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தவிர, பெற்றோர் தங்களது குழந்தைகளை, பூங்காவிற்குள் அழைத்து சென்று, விளையாடுவதற்கு, அனுமதிக்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக, பூங்காவில் மழலைகள் கூட்டமாக வந்து, குதுாகலத்துடன், விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

