/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டேரி பூங்காவில் பயணிகள் வருகை அதிகரிப்பு; இன்று மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்

UPDATED : மே 29, 2025 11:22 PM
ADDED : மே 29, 2025 10:57 PM

குன்னூர், ; நீலகிரி மாவட்டத்தில், 'ரெட் அலர்ட்' காரணமாக, அனைத்து பூங்காக்களும் மூடப்பட்ட நிலையில், குன்னுாரில் இதமான காலநிலை நிலவுவதால், காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கனமழையின் காரணமாக, 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், ஊட்டி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தோட்டக்கலைத் துறையின் பூங்காக்கள் மூடப்பட்டன. குன்னூரில் மரங்கள் நிறைந்த, லாம்ஸ்ராக், டால்பின் நோஸ், சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன.
எனினும், குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் மழையின் தாக்கம் இல்லாமல் இதமான காலநிலை நிலவுவதால், இங்குள்ள காட்டேரி பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
காட்டேரி பூங்காவில் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சி இன்று துவங்கி, ஜூன் ஒன்றாம் தேதி வரை நடக்கிறது. அதில், பனை, இளநீர், கொக்கோ உள்ளிட்ட பல்வேறு மலைப் பயிர்களை கொண்டு, குடிசை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு, வெற்றிலை உள்ளிட்டவைகளில் பல்வேறு பொம்மை வடிவங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோடை சீசனின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, மலை பயிர் கண்காட்சியுடன் இந்த ஆண்டு கோட்டை விழா நிறைவு பெறுகிறது.