/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள்; வருகை அதிகரிப்பு
/
சுற்றுலா பயணிகள்; வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2024 10:57 PM

குன்னுார், ஜன. 17-
பொங்கல் விடுமுறையை ஒட்டி, குன்னுாரில் உள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
பொங்கல் விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மழையின் காரணமாக வெறிச்சோடிய சுற்றுலா மையங்களில், தற்போது கூட்டம் காணப்படுகிறது. குன்னுார், லேம்ஸ்ராக்,டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா மையங்கள் களை கட்டியுள்ளன.
மேகமூட்டம் இல்லாமல் இதமான கால நிலை நிலவுவதால், போட்டோ மற்றும் செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மழையால் பல வாரங்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா மையங்களில் உள்ள கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

