/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊசிமலை காட்சி முனையில் கூடுதல் கண்காணிப்பு: தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றால் கடும் நடவடிக்கை

ADDED : ஏப் 03, 2025 08:30 PM
கூடலுார்:
கூடலுார் ஊசிமலையில் காட்சி முனையில், சுற்றுலா பயணி தேனீக்கள் கொட்டி உயிரிழந்த நிலையில், அங்கு கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள, ஊசிமலை காட்சி முனைக்கு, கேரள மாநிலம் கோழி கோடு பகுதியை சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகியோர் நேற்று முன்தினம் சென்றனர்.
இவர்கள் தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்று, அங்கிருந்த தேன் கூட்டின் மீது கல் எரிந்துள்ளார். தேனீக்கள் பறந்து வந்து கொட்டியதில் சினான், ஆசிப் ஓடி உயிர் தப்பினார். ஜாபீர்,23, உயிரிழந்தார். நடுவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்சி முனையை ஒட்டிய அமைந்துள்ள ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, அறிவிப்பு பலகை வைத்து, கண்காணித்து வருகிறோம்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளோம். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் மீது, வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.