/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு பாதிப்பு! சீசனுக்கு முன்பாக அகற்ற நகராட்சி நிர்வாகம் ஆய்வு
/
சுற்றுலா நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு பாதிப்பு! சீசனுக்கு முன்பாக அகற்ற நகராட்சி நிர்வாகம் ஆய்வு
சுற்றுலா நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு பாதிப்பு! சீசனுக்கு முன்பாக அகற்ற நகராட்சி நிர்வாகம் ஆய்வு
சுற்றுலா நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு பாதிப்பு! சீசனுக்கு முன்பாக அகற்ற நகராட்சி நிர்வாகம் ஆய்வு
ADDED : மார் 06, 2025 09:34 PM

ஊட்டி; ஊட்டியில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் நகரில் ஆங்காங்கே அதிகரித்து வரும் புதிய ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து ஆய்வு செய்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் எவ்வித இடையூறுமின்றி சுற்றுலா தலங்களை ரசித்து செல்லும் வகையில், நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
ஊட்டிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நடுத்தர சுற்றுலா பயணியர் தாவரவியல் பூங்கா; கமர்ஷியல் சாலை, மார்க்கெட், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் சென்று வருகின்றனர்.
அதில், பல்வேறு இடங்களிலும் மக்கள் நடக்க முடியாத அளவுக்கும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால், பலர் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. மேலும், இதே பகுதிகளில், சிலர் ஆளும் கட்சியினர் ஆதரவுடன் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களை நிறுத்தவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஊட்டியில் போலீசார் அனுமதிக்கப்படாத, சில இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதில், மார்க்கெட் எதிரே அடிக்கடி ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பாதிப்பு ஏற்படுவதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இது போன்ற விதி மீறலால் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், 'ஏப் ., இரண்டாவது வாரத்தில் சீசன் களை கட்ட உள்ள நிலையில், ஆக்கிரமிப்புகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தவேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு
இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் நகரின் முக்கியமான பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு நடத்தி வருகிறது.
அதில், ஊட்டி தாவரவியல் பூங்கா, கமர்ஷியர் சாலை, நகராட்சி மார்க்கெட், ஏ.டி.சி., பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு பெட்டி கடைகள்; நடை பாதைகள் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. இவற்றை சீசனுக்கு முன்பாக அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,'' ஊட்டியில் நகராட்சி இடங்கள்; 'பார்க்கிங் தளங்கள்', நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.
அதில், தாவரவியல் பூங்கா சாலையோர பகுதிகள், கமர்ஷியல் சாலை, ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், படகு இல்ல சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில், மக்கள் நடமாடவும், போக்குவரத்துக்கு இடையூராவும் உள்ள கடைகளை சீசனுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.