/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார்-நடுவட்டம் சாலையில் அதிகரிக்கும் வாகன விபத்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்
/
கூடலுார்-நடுவட்டம் சாலையில் அதிகரிக்கும் வாகன விபத்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்
கூடலுார்-நடுவட்டம் சாலையில் அதிகரிக்கும் வாகன விபத்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்
கூடலுார்-நடுவட்டம் சாலையில் அதிகரிக்கும் வாகன விபத்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்
ADDED : நவ 30, 2024 04:42 AM

கூடலுார் : கூடலுார் - நடுவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், அதிகரித்து வரும் வாகன விபத்துகளை தவிர்க்க, ஓட்டுனர்கள்; சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும், கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள், கூடலுார் --ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி, கல்லட்டி சாலை வழியாக சென்று வருகின்றனர். அதில், ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடி வந்த பல சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுக்க, ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடிக்கு செல்ல, உள்ளூர் வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளனர். இதனால், ஊட்டியில் இருந்து கூடலுார், கேரளா, கர்நாடகா செல்வதற்கு சுற்றுலா பயணிகள் கூடலுார்- நடுவட்டம்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், நடுவட்டத்திலிருந்து கூடலுார் நோக்கி வரும் வாகனங்கள், விபத்துக்குள்ளாவது மீண்டும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மூன்று விபத்துகள்
இம்மாதம், 20ம், நடுவட்டத்திலிருந்து பசுந்தேயிலை ஏற்றி வந்த, அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான 'பிக்-அப்' ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒருவர் காயமடைந்தார். மூவர் தப்பினர்.
21ம் தேதி, ஊட்டியில் இருந்து, கூடலுார் நோக்கி வந்த சுற்றுலா கார், சில்வர் கிளவுட், கொண்டை ஊசி வளைவு அருகே விபத்துக்குள்ளானது. ஒருவர் பலத்த காயமடைந்தார். டிரைவர் உட்பட மூவர் மற்றும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதேநாள், ஆகாசபாலம் அருகே,'டெம்போ' சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், கர்நாடகவை சேர்ந்த, 8 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் கூறுகையில்,' பல சிறு வளைவுகள் நிறைந்த இச்சாலையில் விபத்துகளை தவிர்க்க, வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குவது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நடுவட்டத்திலிருந்து, கீழ் நோக்கி வரும் வாகனங்கள் மிதமான வேகத்தில், இயக்குவது குறித்து பல இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதிவேகமாக இயக்கப்படும் வாகன டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.