/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் அதிகரிக்கும் வன விலங்கு பிரச்னை: மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் புலியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறை கண்காணிப்பு

ADDED : ஆக 08, 2025 12:11 AM

கூடலுார்; கூடலுார் பாடந்துறை பகுதியில் உலா வரும் புலியை பிடிக்கவும், காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவர்சோலை அருகே, சர்க்கார்மூலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உலா வரும் புலி, கடந்த சில வாரங்களில், 10 மாடுகளை தாக்கி கொன்றது. தொடர்ந்து, அப்பகுதியில் வன ஊழியர்கள், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'கிராமத்தில் உலா வரும் புலியை பிடிக்கவும், காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில், மக்கள் உரிமை குரல் சார்பில் நேற்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப்பட்டது. அப்போது, 'மாடுகளை தாக்கி கொல்லும் புலியை பிடிப்பதற்கான, உத்தரவு கிடைத்துள்ளது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறுகையில், ''அப்பகுதியில், மாடுகளை தாக்கி கொன்ற, புலியை பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் (வன உயிரினம்) உத்தரவு வழங்கி உள்ளார். புலியை பிடிக்கும் நடவடிக்கைக்காக முதுமலை கள இயக்குனர், மாவட்ட வன அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இரு கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
போராட்டகாரர்கள் கூறுகையில்,' புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு உலாவரும் யானைகளை விரட்ட நடவடிக்கை எக்கவில்லை. இதனால், மாலையில் முடிக்கப்பட்ட போராட்டம் நாளை (இன்று) காலையும் மீண்டும் தொடரும்,' என்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை சர்கார்மூலா பகுதியில், புலியை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உட்பட வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.