sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுதந்திர தினவிழா விடுமுறை; ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்

/

சுதந்திர தினவிழா விடுமுறை; ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்

சுதந்திர தினவிழா விடுமுறை; ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்

சுதந்திர தினவிழா விடுமுறை; ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்


ADDED : ஆக 06, 2025 06:59 AM

Google News

ADDED : ஆக 06, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார்- ஊட்டி இடையே வரும், 15,16,17 தேதிகளில் விடுமுறை தின சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார்-- ஊட்டி இடையே தினமும், தலா, 4 முறை; மேட்டுப்பாளையம்- - ஊட்டி இடையே, தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. ஏற்கனவே, மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே, வார இறுதி நாட்களில், வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி, ஊட்டி- குன்னுார் மற்றும்ஊட்டி-கேத்தி இடையே, வரும், 15, 16, 17 ஆகியதேதிகளில், விடுமுறை தின சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

குன்னுாரில் இருந்து காலை, 8:20 மணிக்கு புறப்பட்டு, ஊட்டிக்கு காலை, 9:40 மணிக்கு ரயில் சென்றடையும். ஊட்டியில் இருந்து மாலை, 4:45 மணிக்கு புறப்பட்டு, குன்னுாருக்கு மாலை, 5:55 மணிக்கு வந்தடைகிறது.

சிறப்பு சுற்று ரயில் ஊட்டி- கேத்தி இடையே இதே, 3 நாட்களில், 'காலை, 9:45 மணி; காலை, 11: 30 மணி; மாலை 3:00 மணி,' என, 3 முறை, 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' என்ற பெயரில் சிறப்பு சுற்று ரயில் இயக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு, 'ஆன்லைனில்' செய்து கொள்ளலாம். முதல் வகுப்பு இருக்கைகள், 80; இரண்டாம் வகுப்பு இருக்கைகள், 130 உள்ளன. அதில், முதல் மற்றும் இரண்டு வகுப்பில் மொத்த முள்ள ஐந்து பெட்டிகளில், தலா ஒரு பெட்டி முன்பதிவு செய்யப்படாதவை. இதனை தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us