/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவ குணம் கொண்ட இந்தியன் 'செர்ரி' பழங்கள்
/
மருத்துவ குணம் கொண்ட இந்தியன் 'செர்ரி' பழங்கள்
ADDED : ஏப் 14, 2025 09:39 PM

கூடலுார்; கூடலுாரில் ஏராளமான மூலிகை செடிகள், மருத்துவ குணங்கள் கொண்ட பழங்கள் விளைகின்றன. இவைகள் அந்தந்த சீசன்களில் மட்டுமே காண முடிகிறது. அதில், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ள, 'இந்தியன் செர்ரி' பழங்கள் தற்போது வீட்டு தோட்டங்களில் விளைந்துள்ளது.
இவைகள் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகிறது. மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்தவர்கள் இதனை உண்டு வருகின்றனர்.
ஆய்வாளர்கள் கூறுகையில், ' உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்ட இந்த பழங்களில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். கூடலுாரில் இதுபோன்று பல பழங்கள் உள்ளன. இவைகளை ஆய்வு செய்து வகைப்படுத்தினால், எதிர்கால சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பழங்களை உற்பத்தி செய்வதன், மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்ட முடியும். இதற்கு தோட்டக்கலை துறையினரும் உதவ வேண்டும்,'என்றனர்.