/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நாராயண குருகுலத்தில் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி
/
ஊட்டி நாராயண குருகுலத்தில் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி
ஊட்டி நாராயண குருகுலத்தில் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி
ஊட்டி நாராயண குருகுலத்தில் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி
ADDED : டிச 13, 2024 08:37 PM

கோத்தகிரி; ஊட்டி நாராயண குருகுலம் பர்ன்ஹில் நித்திய சைதன்யநிதியின், 100வது ஆண்டு பிறந்த தினத்தின் ஒரு கட்டமாக, இந்திய பாரம்பரிய கலை, இசை நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி வியாஸ பிரசாத் தலைமையில், இரு நாட்கள் நடந்த நிகழ்வில் சங்கீதம், நாட்டிய கலைஞர்களின் கலை நிகழ்சி நடந்தது.
அதில், சிங்கப்பூரை சேர்ந்த லெனினின் சங்கீதம்; தென்னிந்தியாவின் மோகன வீணா இசை, போலி வர்க்கீஸ் கதகளி நடனம்; அனர்க்கா பாண்டியாவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும், இசை கலைஞர் உமேஷின் புல்லாங்குழல், வினையனின் ஹர்மோனியம் விஜயகுமாரின் தபுளா, திலீபனின் மிருதங்கம் இசை பார்வையாளர்களை கவர்ந்தது.
நிகழ்சியிவில், நித்திய குருவின் சிஷ்யர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாராயண குருகுலம் நிர்வாகம் செய்து இருந்தது.