/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'போரில் வெற்றியை தீர்மானிப்பது காலாட்படை' :ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டென்ட் பெருமிதம்
/
'போரில் வெற்றியை தீர்மானிப்பது காலாட்படை' :ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டென்ட் பெருமிதம்
'போரில் வெற்றியை தீர்மானிப்பது காலாட்படை' :ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டென்ட் பெருமிதம்
'போரில் வெற்றியை தீர்மானிப்பது காலாட்படை' :ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டென்ட் பெருமிதம்
ADDED : அக் 28, 2024 06:18 AM

குன்னுார்: ''போர் களத்தில் சமீபத்திய நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் வெற்றியை தீர்மானிப்பதில் காலாட்படை முக்கிய பங்கு வகிக்கிறது,'' என, ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கூறினார்.
கடந்த, 1947ம் ஆண்டு அக். 27ல், காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் ஆதரவுடன் நுழைந்த எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை நம் ராணுவம் மீட்டது. காலாட்படையினரின் இந்த வீர செயலை போற்றும் வகையில், ஆண்டுதோறும், அக்.,27ல் ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காலாட்படையினருக்கு பயிற்சி அளித்து வரும், நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 78வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராணுவ பேண்ட் வாத்திய இசை முழங்க, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
தொடர்ந்து, போர் நினைவு தூண் சதுக்கத்தில், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்., ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலியுடன் மரியாதை செலுத்திய பிறகு பேசுகையில்,''தற்போது போர்களத்தில் சமீபத்திய நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் வெற்றியை தீர்மானிப்பதில் ராணுவத்தின் காலாட்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆட்டோ மெஷின் தொழில் நுட்பம் எது வந்தாலும் காலாட்படைக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை,'' என்றார். ராணுவ அதிகாரிகள், வீரர்கள், மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.