தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போதை பொருட்கள் பயன்பாட்டால் பெரும் பாதிப்பு; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

 போதை பொருட்கள் பயன்பாட்டால் பெரும் பாதிப்பு; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

 போதை பொருட்கள் பயன்பாட்டால் பெரும் பாதிப்பு; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்


ADDED : ஜன 14, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ''மது மற்றும் போதை பொருட்களால் உடல்நலன் பாதிக்கப்படும், அந்த பழக்கத்தை துாண்டும் வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால், பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

உலக அளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்னையாக உள்ளது.

ஒருவர் தன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண குடி மற்றும் போதை பொருட்களை நாடுகிறார்.

தொடர்ந்து, அவருக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அந்த பொருட்களின் துணையுடன் அவர் தீர்வு காண முயற்சிக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு போதை பொருளை முதலில் பயன்படுத்த தொடங்கியவர்கள், நாட்கள் செல்ல, செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதை பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்க விரும்புகின்றனர். போதைக்கு அடிமையாகி விட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால், உடலும் பாதிப்படைகிறது,'' என்றார். இதில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்.

உடல் ரீதியான பிரச்னை ஏராளம்...

போதை பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்னை உண்டாகிறது. இவ்வாறு போதை பொருட்கள் பயன்பாட்டால் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புகள் ஏற்படும். போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்ற செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்னைகளும் உண்டாகிறது. எனவே, போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us