/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இறை வழிபாடு இளைய தலைமுறையை வழிநடத்தும்' மஹா மிருத்துஞ்ஜயஹோம பூஜையில் தகவல்
/
'இறை வழிபாடு இளைய தலைமுறையை வழிநடத்தும்' மஹா மிருத்துஞ்ஜயஹோம பூஜையில் தகவல்
'இறை வழிபாடு இளைய தலைமுறையை வழிநடத்தும்' மஹா மிருத்துஞ்ஜயஹோம பூஜையில் தகவல்
'இறை வழிபாடு இளைய தலைமுறையை வழிநடத்தும்' மஹா மிருத்துஞ்ஜயஹோம பூஜையில் தகவல்
ADDED : மே 10, 2025 01:13 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் தொடர் ஆன்மிக சொற்பொழிவு ஒரு வார நிகழ்ச்சி நடந்தது.
அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் அமனகரா தலைமையிலான குழுவினர் பங்கேற்று, கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்றை, பல்வேறு பூஜைகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களுக்கு விளக்கினர்.
இதன் இறுதி நாள் நிகழ்ச்சி, காலை மகா கணபதி ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம், புத்தக பூஜை, பாகவத கீர்த்தனம் ஆகியவற்றுடன் துவங்கியது. தொடர்ந்து மஹா மிருத்துஞ்ஜயஹோமம் நடத்தப்பட்டது. கிருஷ்ணனின் சிலைக்கு ஆராட்டு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், ஸ்ரீ வியாசன் பேசுகையில், ''இன்றைய காலத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று, மேலை நாடுகளில் வேலை செய்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் குழந்தைகளை வளர்ப்பதால், ஆன்மிகத்தின் மீதான நாட்டம் குறைந்து, பல்வேறு தீய செயல்களில் இளைய தலைமுறை ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, போதை பொருட்கள் கடத்துவது மற்றும் பயன்படுத்துவது போன்றவற்றால், எதிர்காலத்திற்கு பலமுள்ள தலைமுறைகள் உருவாகாமல் போய்விடும்.
இதனை தவிர்க்க தங்கள் குழந்தைகளுக்கு, ஆன்மிகத்தின் மீதான பற்றுதலை ஏற்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் அவ்வப்போது ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் அனைவரும் முன்வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, நைவேத்தியம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தோடர் பழங்குடி சமுதாய மக்களும் காணிக்கை செலுத்தி பூஜையில் பங்கேற்றனர். மேல் சாந்தி வைசாக் சர்மா, பிஜு பணிக்கர், சசிதரன் நாயர், பாபு ஆகியோர் பல்வேறு பூனைகளை செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் மேல் சாந்தி சுதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.