ADDED : பிப் 05, 2024 01:05 AM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், 'வேளாண்மையில் புதுமை திட்டங்கள்'என்ற, மாநாடு கோவையில் நடக்கவுள்ளது.
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு மத்தியில், அக்ரி கிளஸ்டர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் இந்திய தலைவராக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், கனடா, இந்தியா நாடுகளுக்கு இடையில், வேளாண் சார்ந்த புதிய திட்டங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொழில்வாய்ப்புகளை மையப்படுத்தி, கோவையில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ''வேளாண் சார்ந்த புதுமையான திட்டங்கள் குறித்த மாநாடு, கோவையில், 22,23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. கனடா மற்றும் இந்தியாவை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். வேளாண் துறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்,'' என்றார்.

