/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளா பேரூராட்சியை குன்னுாரில் இணைக்க வலியுறுத்தல்
/
ஜெகதளா பேரூராட்சியை குன்னுாரில் இணைக்க வலியுறுத்தல்
ஜெகதளா பேரூராட்சியை குன்னுாரில் இணைக்க வலியுறுத்தல்
ஜெகதளா பேரூராட்சியை குன்னுாரில் இணைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2025 09:23 PM
குன்னுார்; 'ஜெகதளா கிராமத்தை குன்னுார் தாலுகாவில் இணைக்க வேண்டும்,' என, மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா சிறப்பு நிலை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. ஜெகதளா, காரக்கொரை, ஒதனட்டி, காணிக்க ராஜ் நகர், அருவங்காடு, கலைமகள் தெரு, செட்டியார் லைன், எம்.ஜி., லைன், ஆரோக்கியபுரம், உள்ளிட்ட கிராமங்கள் குன்னுாரில் அருகில் உள்ளது.
ஆனால், இந்த பேரூராட்சி, கோத்தகிரி தாலுகாவில் உள்ளதால், அரசின் வருவாய் துறை தொடர்பான அத்தியாவசிய பணிகளுக்கு, 35 கி.மீ., துாரமுள்ள கோத்தகிரிக்கு மக்கள் சென்று வரும் அவல நிலை நீடிக்கிறது.
8 கி.மீ., தொலைவிற்கும் குறைவாக உள்ள ஜெகதளா பேரூராட்சியை, குன்னுார் தாலுகாவுடன் இணைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கிராம மக்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகம், மாநில முதல்வர் என பலருக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
எனினும், எந்த தீர்வும் காணப்படாமல் உள்ளது. இந்நிலையில், 8 கி.மீ., துாரத்திற்குள் உள்ள 'குன்னுார் தாலுகாவில், ஜெகதளா பேரூராட்சியை இணைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி ஜெகதளா கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், ஜெகதளா பகுதியை சேர்ந்த சஜீவன் மனு கொடுத்துள்ளார்.
'இந்த திட்டத்தின் கீழ், மனுக்கள் அளித்தால், 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்,' என, அரசு கொறடா ராமச்சந்திரன் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

