/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஷனில் தரமான ராகி வழங்க வலியுறுத்தல்
/
ரேஷனில் தரமான ராகி வழங்க வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2025 07:44 PM
குன்னுார்:
குன்னுார் தாலுகா பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், கண்காணிப்பு குழு காலாண்டு கூட்டம் குன்னூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்தார். அதில், 'ரேஷன் கடைகளில் தரமான ராகி வழங்குவது; அனைத்து நாட்களிலும் அனைத்து கார்டுகளுக்கும் உணவு பொருட்கள் வழங்குவது; காஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சென்று வழங்குவது ; நுகர்வோருக்கு பில் கட்டாயம் வழங்குவது; அனைத்து ரேஷன் கடைகளிலும் பணம் செலுத்துவதற்கான க்யூ ஆர் கோடு வைப்பது; கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக வழங்கல் அலுவலர் உறுதி அளித்தார்.
குன்னுார் தன்னார்வ அமைப்பு தலைவர் மனோகரன், செயலாளர் ஆல்துரை, கண்காணிப்பு குழு உறுப்பினர் நாகராஜ், குன்னுார் தாலுகாவிற்கு உட்பட்ட சமையல் காஸ் வினியோக நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.