/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் உணவகம் அருகே உள்ள கழிப்பிடத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்டில் உணவகம் அருகே உள்ள கழிப்பிடத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் உணவகம் அருகே உள்ள கழிப்பிடத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் உணவகம் அருகே உள்ள கழிப்பிடத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 28, 2025 10:42 PM
கூடலுார்; கூடலுார் நகராட்சி கூட்டம், துணைத் தலைவர் சிவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சுவேதாஸ்ரீ முன்னிலை வகித்தார்.
உஸ்மான்: நகராட்சியில், பழைய பொருட்கள், முறையாக பராமரிக்க தனியாக ஸ்டோர் ரூம் அமைக்க வேண்டும்.
அனுப்கான்: நகரில், 3.25 அடி அகலத்தில் அமைக்கப்பபட்ட புதிய நடைபாதையை, ஆய்வு செய்த கலெக்டர், அதனை, 5.5 அடி அகலமாக மாற்ற அறிவுறுத்தினார். அதற்கான பணிகள் நடக்கவில்லை.
பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்: அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அனுப்கான்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் கடையின் தரை உயரத்துக்கு, சமமாக இன்டர்லாக் கற்கள் அமைக்கப்பட்டதால், கடைகளுக்குள் மழைநீர் செல்கிறது. அதிகாரிகள் முறையாக செயல்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
வெண்ணிலா, சத்தியசீலன்: பணி நடைபெறும் போதே, இதனை தெரிவித்திருந்தால், தவிர்த்திருக்கலாம். ஆனால், பணிகள் முடிந்த பின், அதுவும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற பணி குறித்து இங்கு பேச வேண்டாம்.
உஸ்மான்: கூடலுார் பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடமும், உணவகம் அடுத்தடுத்து உள்ளது. இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, கழிப்பிடத்தை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.