/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2024 11:47 PM
ஊட்டி;ஊட்டி நகராட்சியில் வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஏகராஜ், நகர் நல அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பேசியதாவது;
ஊட்டி நகரில் வார்டுகளை விரைந்து வரன்முறைப்படுத்த வேண்டும். நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையால் பணிகள் சரிவர நடப்பதில்லை. மார்க்கெட் இடிப்பு விவகாரம் வியாபாரிகளிடையே பயத்தை ஏற்படுத்தி வருவதால், அது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். கழிப்பிடம் கட்டடம் இடிந்து 6 பெண்கள் உயிரிழந்தனர்.
அந்த கட்டடத்தின் அருகில் உள்ள சாலை ஊட்டி நகருக்கு மாற்று சாலையாக உள்ளது. போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அந்த சாலை சரியும் அபாயம் உள்ளது. மேலும், லவ்டேலிருந்து வரும் கிராண்டப் சாலையும் அபாயகரமாக உள்ளது. நகரில் பாதாள சாக்கடை இல்லாத 6 வார்டுகளில் ஆய்வு செய்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
கமிஷனர் ஏகராஜ் பேசுகையில், ''நகராட்சி மார்க்கெட்டில் 126 மீ., வரையில் உள்ள கடைகள் இடிக்கப்படும். இதுகுறித்து வியாபாரிகளிடம் பேசி விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது.'' என்றார்.