/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
/
கூடலுார் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
ADDED : ஜன 12, 2025 10:53 PM
கூடலுார்; கூடலுார் நகராட்சியில், 3.18 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு நடந்தது.
கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட, தோட்டமூலா பகுதியில், 1.20 கோடி ரூபாய் நிதியில் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்; கோக்கால் பகுதியில் ,15 வது திட்டக்குழு மானிய திட்ட நிதி 50 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் தரை மட்டம் நீர் தேக்க தொட்டி; மாக்கமூலா - பஸ் ஸ்டான்ட் இடையே, 50 லட்சம் ரூபாயில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்; சில்வர் கிளவுட் அருகே, குப்பை சேகரிக்கும் கூடத்தில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், 42.5 லட்சம் ரூபாய் நிதியில், நடைபெறும் கட்டுமான பணி களின் தரம் குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
மேலும், கூடலுார் நகரில், 38 லட்சம் ரூபாய் நிதியில் புது பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை கழிவுநீர் கால்களுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி; அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி; தேசிய நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ், நந்தட்டியில், 30 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையம்; சில்வர் கிளவுட் அருகே, 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும் ஆய்வு செய்தார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் சுபிதாஸ்ரீ, நகராட்சி தலைவர் பரிமளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.