/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த சோதனை
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த சோதனை
ADDED : நவ 07, 2024 08:11 PM

கூடலுார்; கூடலுார் சேம்பாலா, தேவர்சோலை பகுதிகளில் உள்ள கடைகள்; குடோன்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கூடலுார் பகுதியில் உள்ள கடைகளில், போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கடைகளை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்வதுடன், கடை உரிமையாளர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், தேவர்சோலை பகுதியில் உள்ள சில கடைகளில், ஆர்.டி.ஓ.,செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோன்று, செம்பாலா பகுதியில், உள்ள குறிப்பிட்ட சில கடைகள், குடோன்களில் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.எஸ்.ஐ., விஜயன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
போலீசார் கூறுகையில், 'தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க, தொடர்ந்து இதுபோன்று சோதனை மேற்கொள்ளப்படும்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் கடை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.