/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமில்லாத சாலை பணி ஆய்வு செய்வது அவசியம்
/
தரமில்லாத சாலை பணி ஆய்வு செய்வது அவசியம்
ADDED : மார் 20, 2024 09:46 PM

குன்னுார் : குன்னுார் சமயபுரம் ஆழ்வார்பேட்டை பகுதியில் மின்கம்ப செடிகளை கூட அகற்றாமல் சிமென்ட் சாலை செப்பனிட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 9வது வார்டு பகுதியில் சமயபுரம் ஆழ்வார் பேட்டை அமைந்துள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நகராட்சி சார்பில் தேர்தல் அறிவிக்கும் முன்பு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது.
இங்கு உள்ள மின்கம்பம் மற் றும் அதில் இருந்த செடிகளை கூட அகற்றாமல் சாலை செப்பனிப்பட்டது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'நகராட்சி மைதானத்திலிருந்து சமயபுரம் ஆழ்வார் பேட்டை வரை சிமென்ட் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை அமைத்த நாளிலேயே கால்நடைகள் வந்ததால் பல இடங்களிலும் கால் தட அச்சுகள் பதிவாகி மோசமான நிலையில் காணப்படுகிறது.
மேலும் வீடுகளையொட்டி மழை நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தாமல் செப்பனிடப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.
இந்த வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணியை, 22வது வார்ரை நீட்டித்துள்ளதால், 9வது வார்டு சாலை பணி தரமில்லாமல் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

