/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் சீரமைப்பு பணி குறித்த ஆய்வு; நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்

ADDED : டிச 13, 2024 08:36 PM
ஊட்டி; எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஊட்டி அருகே எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து, முள்ளிகூர், நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் குன்னூர் நகராட்சி, ராணுவ முகாம், பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இத்திட்டத்திற்காக ஆங்காங்கே பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. எமரால்டு பிரதான இடத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டு அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் கடந்த ஒரு மாதமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீர் வெளியேறும் போது குன்னுார் பகுதிகளுக்கு செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்ட பாலம் சேதமாகி தண்ணீர் வினியோகம் தடைப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரிய சார்பில், 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேதமான பகுதிகளை இரும்பு தடுப்பு அமைத்து சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இப்பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.