/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அமராவதி பாலத்தில் மின்விளக்கு அமையுங்க
/
அமராவதி பாலத்தில் மின்விளக்கு அமையுங்க
ADDED : டிச 23, 2024 05:23 AM
உடுமலை : மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகளும், பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார், இருசக்கரவாகனங்கள் செல்கின்றன.
இதனால், அங்கு எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இரவு நேரத்தில், அந்த பாலத்தில் மின்விளக்குகளும், பிரதிபலிப்பான் இல்லாததால், நடந்து செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அப்போது பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து விடுகிறது. எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பொதுப்பணித்துறையினரும், பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.