தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான சாகுபடி மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

 தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான சாகுபடி மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

 தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான சாகுபடி மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : பிப் 25, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: 'நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பசுந்தேயிலை சாகுபடி செய்யலாம்,' என, அறிவுறுத்தப்பட்டது.

கோத்தகிரி கடக்கோடு கிராமத்தில், தேயிலை வாரியம் மற்றும் 'அக்ரி போர்டல்' சார்பில், விவசாயிகளுக்கான டிஜிட்டல் மாற்றம் மற்றும் துல்லிய விவசாயம் குறித்த செயல் விளக்க கூட்டம் நடந்தது.

அபிவிருத்தி இயக்குனர் வெங்கட்ராமன் ஆனந்த் வரவேற்றார். தேயிலை வாரிய இயக்குனர் பரணி குமார் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் சுகாசந்தா கர்மாகர், உபாசி பொது செயலாளர் சஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, தொழில்நுட்ப பிரிவு அதிகாரி பியூஸ் குமார் பேசியதாவது:

தேயிலை விவசாயிகள் டிஜிட்டல் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, வானிலை உணர்வுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். மேலும், தரத்தை உயர்த்துவதன் வாயிலாக, உள்ளீட்டு செலவை குறைத்து லாபம் அடையலாம். இதன் வாயிலாக, கூடுமானவரை மகசூலும் அதிகரிக்கும். குன்னுார் தேயிலை வாரியம், அக்ரி போர்டெல் உதவியுடன், கோத்தகிரி பகுதியில் முதற்கட்டமாக, இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுடன் இணைந்து, தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிப்பு, பசுந்தேயிலையின் தரம், நோய் மேலாண்மைக்கு உதவுவது மற்றும் பண்ணை நடவடிக்கைகளை அதிகரித்து செயல் திறன் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மாவட்டத்தில், தேயிலை தோட்டங்களின் பரப்பளவு கணிசமாக குறைந்துள்ளது. தரமற்ற பசுந்தேயிலை விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தேயிலையின் தரத்தை உயர்த்தி, சாகுபடி பரப்பளவை அதிகரிக்க செய்து, விவசாயிகள் லாபம் பெற தேயிலை வாரியம் முனைப்பு காட்டி வருகிறது.

இதன் மூலம், தேயிலை எஸ்டேட்கள் வைத்துள்ளவர்களுக்கு கிடைக்கும் அனைத்து பயன்களும், சிறு, குறு விவசாயிகளுக்கும் கிடைக்கும்.

தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் மாதாந்திர குறைந்தபட்ச கொள்முதல் விலையை தர மறுக்கும் தொழிற்சாலைகள் மீது, புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க, வாரியம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மீறி கலப்படம் செய்தல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கடக்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us