/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : நவ 22, 2024 11:22 PM
கோத்தகிரி: 'நீலகிரியில் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள், பணிமனைகள், முடி திருத்தும் நிறுவனங்கள் விவசாய பொருட்கள் சுத்தம் செய்யும் நிறுவனங்கள் உட்பட, இதர நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களின் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள் பெறாமல் பல இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால், இவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், முழு தகவல் தெரிவதில்லை.
இதனை தவிர்க்கும் பொருட்டு, வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், அவர்களது அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்று பணியமர்த்த வேண்டும்.
தொழிலாளர் துறை வலைத்தள பக்கமான, 'https://lahour.tn.gov.in / ism- Employer Registration' என்பதை 'கிளிக்' செய்ய வேண்டும்.
பிறகு, பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண், மொபைல் எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட முழு விவரத்தினை பதிவு செய்து, மேற்கண்ட வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் விபரத்தினை, குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவேற்றம் செய்வதில் சிரமம் இருப்பின், ஊட்டி பகுதியை சேர்ந்தவர்கள், 99627-59243; குன்னுார் பகுதியை சேர்ந்தவர்கள், 80563 16294; கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதியை சேர்ந்தவர்கள், 82480 23730 ஆகிய மொபைல் எண்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.