தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்


UPDATED : நவ 22, 2026 07:46 PM

ADDED : நவ 22, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:46 PM ADDED : நவ 22, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் சார்பில் தீட்டுக்கல் கிராமத்தில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, மண் வள அட்டைகள் வழங்குதல் தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மண்ணின் வளநிலையை மதிப்பீடு செய்வதிலும், உரிய ஊட்டச்சத்து மேலாண்மை முடிவுகளை மேற்கொள்வதிலும் மண் வள அட்டைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மண் மற்றும் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர், முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் கூறியதாவது:-

நிலையான வேளாண்மையை மேம்படுத்துவதற்காக மண் வள மேலாண்மை, சமச்சீர் ஊட்டச்சத்து பயன்பாடு, மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விவசாயிகளின் விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

காய்கறிப் பயிர்களில் சமச்சீர் உரமிடுதல் மிகவும் முக்கிய அம்சம் ஆகும். பயிர்களின் தேவைகள் மற்றும் மண்ணின் வளநிலைக்கு ஏற்ப, உரங்களை உரிய அளவில் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கேற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். மேலும், மண்ணின் வளத்தையும் ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் தொழு உரங்கள், பயிர்க் கழிவுகள், உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையின் கொள்கைகள் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும்.’’ என்றார்

ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான ஹொம்பேகவுடா, வனிதா, ஆன்னேபு, ஷீட்டல், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us