தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 16 வது நாளாக போராட்டம்


ADDED : மார் 05, 2024 09:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 16 வது நாளாக, கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதனால், இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க, மாநில அரசு முன்வரவேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது.

இதில், சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண் பிரபு, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்தராணி உட்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us