தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சர்வதேச ஒலிம்பிக் தின தடகள போட்டி

 சர்வதேச ஒலிம்பிக் தின தடகள போட்டி

 சர்வதேச ஒலிம்பிக் தின தடகள போட்டி


ADDED : ஜூன் 25, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி) சார்பில், தங்கராஜ் மைதானத்தில் சர்வதேச ஒலிம்பிக் தின தடகள போட்டி நடந்தது. இளைஞர் மேம்பாடு, விளையாட்டு திறன் மற்றும் தேசிய கூட்டமைப்பை ஊக்குவிக்க, நடத்திய இப்போட்டியில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என, 19 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகள பிரிவுகளில், தங்களின் திறமைகளையும், அசாத்திய விளையாட்டு திறனையும் மாணவர்கள் வெளிப்படுத்தினர். கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

மாணவர்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெலிங்டன் ராணுவ பப்ளிக் பள்ளி கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, ஏழை எளிய மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க எம்.ஆர்.சி., சார்பில் இலவச தொழில்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தி, பின்தங்கிய பின்னணியை சேர்ந்த மாணவர்களும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us