/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சர்வதேச சிட்டு குருவிகள் தினம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
சர்வதேச சிட்டு குருவிகள் தினம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சர்வதேச சிட்டு குருவிகள் தினம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சர்வதேச சிட்டு குருவிகள் தினம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 20, 2024 09:50 PM

ஊட்டி : ஊட்டி சி.எஸ்.ஐ ஹோபார்ட் நடுநிலை பள்ளியில், சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் நடந்தது.
தேசிய பசுமை படை நீலகிரி மாவட்டம் சார்பில், சர்வதேச சிட்டுக் குருவிகள் தினத்தை ஒட்டி ஓவியப்போட்டி, மற்றும் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் அன்பை ஆயுதமாக வைத்து சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும். எந்த ஜீவன்களுக்கும் வன்முறையிழைக்க கூடாது,'' என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''சிட்டுக்குருவிகள் தொடர்ந்து கூடு கட்ட முடியாத நிலையில் தவித்து வருகின்றன, இயற்கைக்கு பாதகம் இல்லாத மூங்கில், மண்ணால் உருவாக்கப்பட்ட கூடுகள், பலகை கூடுகள் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கூடுகள் தவிர்க்க வேண்டும். வெயில் காலம் என்பதால் குடிநீர் வைத்து அவற்றின் தாகம் தீர்க்க உதவ வேண்டும். சிறு தானியங்கள் உணவாக கொடுக்க வலியுறுத்த வேண்டும். மேலும் வீட்டுத்தோ ட்டங்களை இயற்கை விவசாயம் மேற்கொள்வது சிட்டு குருவியின் வளர்ச்சிக்கு நல்ல முயற்சியாக அது இருக்கும்,'' என்றார்.

