/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொச்சியில் சர்வதேச தேயிலை மாநாடு: 18ல் துவக்கம்
/
கொச்சியில் சர்வதேச தேயிலை மாநாடு: 18ல் துவக்கம்
ADDED : செப் 15, 2025 08:52 PM
குன்னுார்; குன்னுாரில் ஆண்டுதோறும் நடக்கும் உபாசி மாநாடு இந்த முறை, கொச்சியில், - இந்திய-சர்வதேச தேயிலை, 8வது மாநாட்டுடன் நடத்தப் படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) தலைவர் மேத்யூ ஆபிரகாம் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும், 8வது இந்திய-சர்வதேச தேயிலை மாநாடு, கொச்சி கிராண்ட் ஹயாட் கொச்சி போல்காட்டில் வரும், 18ல் துவங்குகிறது. இந்த நிகழ்வுடன், 20வது ஆண்டு 'கோல்டன் லீப் இந்தியா' விருதுகளுக்கான இறுதி போட்டி, 132வது ஆண்டு உபாசி மாநாடு ஆகியவையும் நடக்கிறது.
தேயிலை வாரியம், தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுடன், நடக்கும், 8வது மாநாட்டில் 'எதிர்கால தேயிலை சூழலியல் அமைப்பை புதுமைப்படுத்துதல்' தலைப்பில் ஆட்டோமேஷன், டிஜிட்டல் மயமாக்கலுக்கு அப்பாற்பட்டு, மனித படைப்பாற்றல், மேம்பட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் நிலையான நடைமுறைகளின் இணக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய தேயிலை தொழிலின் முன்னேற்றம் குறித்து வலியுறுத்தப்படுகிறது.
விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நுகர்வோர் இடையே ஒத்துழைப்பை வளர்ப்பது; எதிர்கால தேவைகளுக்கான மீள்தன்மை, உள்ளடக்கம் இடம் பெறுகிறது.
10க்கும் மேற்பட்ட தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளை சேர்ந்த, 450 பிரதிநிதிகள் பங்கேற்று, உலகளாவிய தேயிலை மதிப்பு சங்கிலி குறித்தும், மேம்பாடுக்கான முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
மாநாட்டில் உயர் மட்ட குழு விவாதங்கள், தொழில்நுட்ப அமர்வுகள், முக்கிய சவால்கள், உலகளாவிய தேயிலை பொருளாதாரத்தில் நம் நாட்டின் பங்கு விவாதம் மற்றும் தொழில்துறை கண்காட்சி ஆகியவை நடக்கிறது. குன்னுாரில் ஆண்டுதோறும் நடக்கும் உபாசி மாநாடு இந்த முறை, இந்திய-சர்வதேச தேயிலை, 8வது மாநாட்டுடன் கொச்சியில் நடத்தப்படுகிறது. இவ்வாறு மேத்யூ ஆப்ரகாம் கூறினார்.