/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சர்வதேச வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி
/
சர்வதேச வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 08, 2024 11:20 PM

ஊட்டி : ஊட்டியில் சர்வதேச வன உயிரின வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சர்வதேச வன உயிரின வார விழா ஆண்டு தோறும் அக்., 2ம் தேதி முதல் அக்., 8ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, நீலகிரி வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று கலெக்டர் அலுவலக அருகே நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். பேரணி, அரசு கலைக்கல்லுாரியில் நிறைவடைந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ''மனித - விலங்கு மோதலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் வனத்துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். வீட்டிற்கு வெளியே ஏதேனும் விலங்குகளின் சப்தம் கேட்டால் சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், '' என்றார்.
மாவட்ட வன அலுவலர்கள் கவுதம், வெங்கடேஷ் பிரபு, அரசு கல்லுாரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.