/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இணையதள சேவை முடக்கம்; பொருட்கள் வாங்க முடியாமல் அவதி
/
இணையதள சேவை முடக்கம்; பொருட்கள் வாங்க முடியாமல் அவதி
இணையதள சேவை முடக்கம்; பொருட்கள் வாங்க முடியாமல் அவதி
இணையதள சேவை முடக்கம்; பொருட்கள் வாங்க முடியாமல் அவதி
ADDED : ஏப் 01, 2025 09:54 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் இணையதள சேவை முடங்கியதால் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க, கைரேகை வைத்து பதிவு செய்யப்படும் வகையில்,'பாயிண்ட் ஆப் சேல்,' எனப்படும் இயந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அதில், நுகர்வோரின் கைரேகை வைத்து, வினியோகம் செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் பதிவு செய்தால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வாங்க இயலும்.
இந்நிலையில், மாதத்தின் முதல் தேதியான நேற்று, மாவட்டத்தின் பல இடங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பந்தலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் காலையில் ரேஷன் கடைகளுக்கு வந்த நுகர்வோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலையில், பலர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். நீண்ட துாரத்தில் இருந்து வந்த பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பழங்குடியின மக்கள் கூறுகையில், 'நாங்கள் ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி இருக்கிறோம். மாதத்தின் கடைசி வாரத்தில் அரிசி முடிந்துவிடும் நிலையில், முதல் தேதி வாங்கி செல்லலாம் என்று வேலைக்கு செல்லாமல் ரேஷன் கடைக்கு வந்தோம். ஆனால், இங்கே நெட்வொர்க் இல்லை என்று கூறி பொருட்கள் தர மறுத்ததால் ஏமாற்றுடன் திரும்பி செல்கிறோம். இன்று எங்களுக்கான கூலியும் போய்விட்டது,' என்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''நெட்வொர்க் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சீராக்கப்படும்,'' என்றார்.

