/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை வேட்டையாட ஊடுருவியவர் கைது; இரு வாகனங்களை பறிமுதல்; நான்கு பேருக்கு 'வலை'

ADDED : நவ 21, 2025 07:37 AM

ஊட்டி: ஊட்டி அருகே, காட்டெருமையை வேட்டையாட ஊடுருவிய கேரளா நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, கல்லக்கொரை தெற்கு வனக்கோட்டத்தில், ஒரு கும்பல் காட்டெருமை வேட்டையாடுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், ரேஞ்சர் ராம் பிரகாஷ் மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் விசாரணையை தீவிரப் படுத்தினர்.
விசாரணையில், 'அவர் கேரளா மாநிலம் வழிக்கடவு பகுதியை சேர்ந்த ரெஜி, 47, என்பதும், காட்டெருமை வேட்டையாட வனப்பகுதியில் ஊடுருவினார்,' என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த வனத்துறையினர் இரண்டு வாகனங்கள், எலக்ட்ரானிக் தராசு, அரிவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவருடன் வந்திருந்த நான்கு பேரை தேடி வருகின்றனர்.