/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; மர்ம நபர் குறித்து விசாரணை
/
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; மர்ம நபர் குறித்து விசாரணை
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; மர்ம நபர் குறித்து விசாரணை
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; மர்ம நபர் குறித்து விசாரணை
ADDED : ஆக 04, 2025 07:58 PM
ஊட்டி; ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
ஊட்டி பாட்னா ஹவுஸ் பகுதியில் விடுதியில் பணிபுரியும் பராமரிப்பாளர் ஒருவரின் வாகனம் திருட்டு போய் உள்ளது. அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் பைக்கை மெதுவாக தள்ளி செல்வது தெரியவந்தது.
ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளர்கள், கடந்த இரு மாதங்களாக பெங்களூரில் படித்து வரும் தனது மகளின் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பிரோக்களை உடைத்துள்ளார். இது அங்குள்ள, சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.