/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நள்ளிரவில் கதவை உடைத்த பெண் குறித்து விசாரணை
/
நள்ளிரவில் கதவை உடைத்த பெண் குறித்து விசாரணை
ADDED : டிச 22, 2025 05:42 AM
கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில், காய்கறி கடை நடத்தி வருபவர் லோகேஸ்வரன். கடந்த, இரு தினங்களுக்கு முன்பு, வியாபாரத்தை முடித்து கடையை அடைத்து விட்டு, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில், உறங்கி கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு ஒரு மணி அளவில், கதவை உடைத்து ஒரு பெண் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சப்தம் கேட்டு, வெளியே வந்த லோகேஸ்வரன் சப்தம் போடுவே, அந்த பெண் 'மாஸ்க்' அணிந்தபடி, வரவேற்பு அறைக்குள் நுழைந்துள்ளார். குடும்பத்தினர் அவரை விரட்டி உள்ளனர்.
இது குறித்துலோகேஸ்வரன், கோத்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜீவானந்தன் கூறுகையில்,'' இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

