/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர அழைப்பு
/
வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர அழைப்பு
ADDED : ஏப் 14, 2025 07:01 AM
ஊட்டி : வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர தொழிலாளர் உதவி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் அறிக்கை:
உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, 19 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள, 18 வயதிற்கும் மேற்பட்ட 60 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது , வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட உள்ளனர். உறுப்பினர்களாக சேருபவர்கள் www.tnuwwb.in என்ற இணையதள மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள், 5 ஆண்டுக்கு ஒரு முறை பதிவினை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, இரண்டு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.