/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் சிறந்த பழ தோட்டம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
நீலகிரியில் சிறந்த பழ தோட்டம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
நீலகிரியில் சிறந்த பழ தோட்டம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
நீலகிரியில் சிறந்த பழ தோட்டம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 21, 2025 04:44 AM
குன்னுார்: குன்னுார் சிம்ஸ்பூங்கா பழ கண்காட்சி போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குன்னுார் தோட்டக்கலை துறை தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:
குன்னுார் சிம்ஸ்பூங்காவில், 65வது பழகண்காட்சி, மே, 23 முதல் 25ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி, நீலகிரியில் உள்ள சிறந்த பழ தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள், குன்னுார் சிம்ஸ்பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 29ம் தேதி முதல் பதிவு ஒன்றுக்கு, 75 ரூபாய் செலுத்தி மே, 10ம் தேதி வரை பெறலாம்.
இந்த பழக்கண்காட்சி போட்டிக்கு, ஊட்டி, கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் உள்ள போட்டியாளர்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் கோத்தகிரி, கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில், போட்டிக்கான விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மே, 11ம் தேதிக்குள், சிம்ஸ்பூங்கா அலுவலகத்தில், சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பழ தோட்டங்களை தேர்வு செய்யும் குழுவினர், மே, 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் பார்வையிட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

