/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலிக்கல் பேரூராட்சியில் கடைகள் டெண்டரில் முறைகேடு?
/
உலிக்கல் பேரூராட்சியில் கடைகள் டெண்டரில் முறைகேடு?
உலிக்கல் பேரூராட்சியில் கடைகள் டெண்டரில் முறைகேடு?
உலிக்கல் பேரூராட்சியில் கடைகள் டெண்டரில் முறைகேடு?
ADDED : மார் 26, 2025 08:53 PM
குன்னுார்; 'உலிக்கல் பேரூராட்சியில் பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ள சிலர் மீண்டும் வேறு பெயர்களில், கடைகளை டெண்டர் எடுத்துள்ளனர்,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு, பயனாளிகள் பயன்பெற்றும் வந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த டெண்டர் முறையாக அறிவிக்காமல், ஆளும் கட்சியினர், எதிர்கட்சியான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கடைகளை ஏலம் எடுத்து, உள்வாடகைக்கு விட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'டெண்டர் எடுத்த பலர் மாத வாடகையில் பாக்கி வைத்துள்ளனர். இதனால், முறைப்படி ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க உலிக்கல் பஞ்சாயத்திடம் கேட்கப்பட்டது.
எனினும், கடந்த மாதம், 20ல் டெண்டர் அறிவிப்பதாக கூறி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. திடீரென யாருக்கும் முறையாக அறிவிக்காமல், டெண்டர் குறித்து முக்கியமான நபர்களுக்கு மட்டும் தெரிவித்து ஏலமும் விடப்பட்டுள்ளது.
அதில், ஏற்கனவே, டெண்டர் எடுத்தவர்கள் பல லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் வேறு பெயர்களில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.
உலிக்கல் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில்,''அரசின் விதிமுறைப்படி முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. அதில், முதலில் ஏலம் கோர யாரும் முன்வரவில்லை. கடைகளை உள் வாடகை கொடுத்தது குறித்து வந்த புகார் என்றால், அவர்கள் கடை உரிமையாளரின் உறவினர்களாக இருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்,''என்றார்.