ADDED : ஏப் 06, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரியில் ஈஷா யோகா மையம் சார்பில், நாளை முதல், ஒரு வாரம் இறைநிலை வகுப்பு, நடப்பதால், வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நோய்களில் இருந்து விடுபடவும், பயம், பதற்றத்தை போக்கவும், ஞாபக சக்தியில் முன்னேற்றம் ஏற்படவும், சக்தி வாய்ந்த ஷாம்பவி மகா முத்ரா தீட்சை அடையவும், ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கவும், இந்த யோகா வகுப்பு நடத்தப்படுகிறது. வரும், 8ம் தேதி முதல், 14ம் தேதிவரை, கோத்தகிரி காமராஜர் சதுக்கம், அன்னமார் காட்டேஜில், காலை, 6:30 மணிமுதல், 9:00 மணி; 10:00 மணி முதல், 12:30 மணி; மாலை, 6:00 மணிமுதல் இரவு, 8:30 மணிவரை நாள்தோறும், மூன்று கட்டங்களாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முன்பதிவுக்கு, 8012780790 என்ற என்ற மொபைல் எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
