/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்களின் விருப்பம் அறிந்து படிக்க வைத்தால் பயன்; பள்ளி ஆண்டு விழாவில் தகவல்
/
மாணவர்களின் விருப்பம் அறிந்து படிக்க வைத்தால் பயன்; பள்ளி ஆண்டு விழாவில் தகவல்
மாணவர்களின் விருப்பம் அறிந்து படிக்க வைத்தால் பயன்; பள்ளி ஆண்டு விழாவில் தகவல்
மாணவர்களின் விருப்பம் அறிந்து படிக்க வைத்தால் பயன்; பள்ளி ஆண்டு விழாவில் தகவல்
ADDED : பிப் 11, 2025 11:22 PM

பந்தலுார்; பந்தலுார் டியூஸ் மெட்ரிக் பள்ளியின், 32வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் இயக்குனர் பரணிகுமார் வரவேற்று, பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் புதிய முறைகள் குறித்து விளக்கி பேசினார்.
இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தாளாளர் உஜ்வல்தீப் காடேராவ்சாகேப் துவக்கி வைத்து பேசினார். பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் பேசுகையில், ''கல்வி மட்டுமே அழியா செல்வமாக உள்ள நிலையில், முறையாக கல்வி கற்று கொண்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்,'' என்றார்.
நெடுகுளா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி பேசுகையில், ''குழந்தைகள் வீடுகளுக்கு செல்லும்போது அங்கு, மகிழ்வை தரும் சூழலும், பள்ளிக்கு மாணவர்கள் வரும்போது மகிழ்வான கல்வியை தரும் வகையில், இரண்டு இடங்களும் ஒரு மரமாக இருக்க வேண்டும்.
அதேபோல் மாணவர்கள் எந்த துறையில் படிக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து, ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்,''என்றார்.
தொடர்ந்து நடந்த, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பி.டி.ஏ. தலைவர் எபினேசர் நன்றி கூறினார்.