/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்; ராம நாம சமர்ப்பண ரதோற்சவத்தில் அறிவுரை
/
மது இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்; ராம நாம சமர்ப்பண ரதோற்சவத்தில் அறிவுரை
மது இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்; ராம நாம சமர்ப்பண ரதோற்சவத்தில் அறிவுரை
மது இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்; ராம நாம சமர்ப்பண ரதோற்சவத்தில் அறிவுரை
UPDATED : ஏப் 10, 2025 11:03 PM
ADDED : ஏப் 10, 2025 09:25 PM

குன்னுார்; ''நீலகிரி முழுவதும் மது இல்லாத கிராமங்களை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, உபதலை சாய் நிவாஸ் சச்சிதானந்த குரு ஸ்ரீநவீன் சாய் பேசினார்.
குன்னுார் உபதலை கிராமத்தில், நீலகிரி சாய் நிவாஸ் சாய் பக்தர்கள், சாதுக்கள் மற்றும் சந்நியாசிகள், பிரம்மகுமாரிகள், நாக்கு பெட்டா படகர் நல சங்கத்தினர் இணைந்து, ராம நாம சமர்ப்பண ரதோற்சவம் மற்றும் ஜோதிர் லிங்க தரிசன பயணத்தை துவங்கினர்.
இதனை சாய் நிவாஸ் சச்சிதானந்த குரு ஸ்ரீநவீன் சாய் துவக்கி வைத்து பேசியதாவது:
மாவட்டம் முழுவதும் படுக கிராமங்களில் வரும், 15ம் தேதி வரை நடக்கும் ஆன்மிக கலாசார ரதோத்சவம் பயணத்தில், சமூக நலன், கலாசார பாதுகாப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அன்பு, ஆன் மிகம், சேவையை வலியுறுத்தியும், சமுதாய நலன் மற்றும தேச நலனுக்காக நடத்தப்படுகிறது. இது ஒற்றுமை பரஸ்பர மரியாதை, சமூக நல நடவடிக்கை ஒருங்கிணைக்க பயனாக அமையும்.
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவநோடு, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி பெறுவதை உறுதி செய்வதை ஊக்குவிக்கிறது.
சுற்றுச்சூழல் சவால்களை கருத்தில் கொண்டு, நிலையான நடைமுறைகளை ஏற்று கொள்ள இயற்கையை பாதுகாக்க தனிநபர்கள் முன்வர வேண்டும். போதைபொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், இந்த யாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மாவட்டம் முழுவதும் மது இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். சாய் நிவாஸ் சுவாமி மேகநாத் சாய் உட்பட சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.

