/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை மேம்படுத்துவது அவசியம்
/
ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை மேம்படுத்துவது அவசியம்
ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை மேம்படுத்துவது அவசியம்
ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை மேம்படுத்துவது அவசியம்
ADDED : ஜன 29, 2025 08:27 PM

கோத்தகிரி; 'கோத்தகிரி ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை, கோடை சீசனுக்குள் மேம்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில், மாவட்டத்தின் முதல் கலெக்டர் அலுவலகமான ஜான் சல்லிவன் நினைவகம் அமைந்துள்ளது. இந்த நினைவகம்,தற்போது, நீலகிரி மாவட்ட ஆவண பாதுகாப்பு மையமாக விளங்குகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஜான் சல்லிவன் நினைவகத்திற்க்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆவண காப்பகம் அருகே, சல்லிவன் நினைவு பூங்கா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் பூங்காவுக்கு சென்று அழகை கண்டுக்களிக்க தவறுவதில்லை. இதனால், இந்த பூங்கா, கோத்தகிரி பகுதியில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இந்நிலையில், பூங்காவில் போதுமான மலர் செடிகள், அழகு மரங்கள் நடவு செய்து, பூங்காவை பொலிவு படுத்தவில்லை.
கிராம மக்கள் கூறுகையில், 'நடப்பாண்டு, மே மாதம் துவங்கும் கோடை சீசன் நாட்களில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, பூங்காவின் அழகை மேலும் மேம்படுத்துவது அவசியம்,' என்றனர்.

