/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் வாக்காளர் பட்டியலில் தொடரும் குளறுபடிகள் தீர்வு காண்பது அவசியம்
/
குன்னுார் வாக்காளர் பட்டியலில் தொடரும் குளறுபடிகள் தீர்வு காண்பது அவசியம்
குன்னுார் வாக்காளர் பட்டியலில் தொடரும் குளறுபடிகள் தீர்வு காண்பது அவசியம்
குன்னுார் வாக்காளர் பட்டியலில் தொடரும் குளறுபடிகள் தீர்வு காண்பது அவசியம்
ADDED : டிச 09, 2024 04:39 AM
குன்னூர் : 'வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய பகுதியில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஆண்டுதோறும் தேர்தல் நேரத்தில் ஒட்டளிக்க செல்லும் வாக்காளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, குன்னுார் சட்டமன்ற வாக்காளர் பட்டியல்களில் ஏராளமான தவறுகள் சரி செய்யப்படாமல் நீடிக்கிறது. வெலிங்டன் சிங்காரதோப்பு பகுதியில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் இரு இடங்களில் பதிவாகியுள்ளது. இறந்து போனவர்களின் பெயர்கள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் தொடர் எண்கள் வெவ்வேறு பூத்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வெலிங்டன் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தர்மசீலன் கூறியதாவது:
வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய பகுதியில், பாகம் எண்-127 முதல் 137 முடிய உள்ள வாக்காளர்கள் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இவற்றை வீடு, வீடாக சென்று பார்த்தால் மட்டுமே சரி செய்ய முடியும். வாக்காளர் பட்டியல்களை சரி செய்யும், பி.எல்.ஓ., எனப்படும் சத்துணவு பணியாளர்களுக்கு தனியாக 'மொபைல்' போன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன்படுத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பணியாளர்களுக்கு இதனை உரிய முறையில் பயன்படுத்தி திருத்தங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்யும்போது பட்டியலில் அதே குளறுபடிகள் தொடர்கிறது. இங்கு மட்டுமின்றி நீலகிரி முழுவதும் இதுபோன்ற பல இடங்களில் குளறுபடிகள் உள்ளன. எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''இது தொடர்பான புகார் வந்ததன் அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.