sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கும்பமேளாவில் பங்கேற்ற தோடர் பழங்குடியினர் மலை மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தகவல்

/

கும்பமேளாவில் பங்கேற்ற தோடர் பழங்குடியினர் மலை மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தகவல்

கும்பமேளாவில் பங்கேற்ற தோடர் பழங்குடியினர் மலை மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தகவல்

கும்பமேளாவில் பங்கேற்ற தோடர் பழங்குடியினர் மலை மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தகவல்


ADDED : பிப் 16, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; உத்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில், ஊட்டியை சேர்ந்த தோடர் பழங்குடி இனமக்கள் பங்கேற்று பாரம்பரிய நடனமாடி புனித நீராடி வந்தனர்.

உத்தர பிரதேசத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம், 13-ம் தேதி துவங்கியது. 26-ம் தேதி வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

இதற்காக, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 எக்டர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துாய்மை பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், நீலகிரியின் பூர்வ பழங்குடிகளான தோடர் பழங்குடியின மக்கள் மகா கும்பமேளாவுக்கு சென்றனர். அங்கு புனித நீராடி அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டனர். தோடர் பழங்குடியின மக்கள் சார்பில், மணி என்பவர் கூறுகையில்,''ஊட்டியில் இருந்து, 10 பெண்கள்; 10 ஆண்கள் என, 20 பேர் கும்பமேளாவில் பங்கேற்றோம்.

'வனவாசி கல்யாண ஆஸ்ரமம்' என்ற அமைப்பின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடந்த இடத்தில் நீலகிரி பழங்குடிகளின் கலாசாரத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கும்பமேளாவுக்கு பின், காசி, அயோத்தி ஆகிய புனித தலங்களுக்கு சென்று வந்தோம். நீலகிரி பழங்குடிகளில் எங்கள் குழுவினர் முதன் முதலாக சென்று வந்தோம். அதில், இயற்கை சூழ்ந்த மலை மாவட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தோம்,''என்றனர்.






      Dinamalar
      Follow us