/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன்

ADDED : அக் 17, 2024 10:02 PM

கூடலுார் : கூடலுார் நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ள, கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சியில் துாய்மை இந்திய திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட கழிவுநீர் உறிஞ்சும் வாகனம், நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை, வாங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
மக்கள் கூறுகையில், 'கழிவுநீரை அகற்ற தனியார் வாகனத்தில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. நகராட்சி வாகனம் இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் குறைந்த கட்டணத்தில், கழிவுநீரை அகற்ற முடியும். எனவே, நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.