UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூர் அருகே, அருவங்காடு பகுதியில் இருந்து ஜெகதளா செல்லும் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு, அடர்ந்து வளர்ந்துள்ள மரக்கிளைகளால் முழுமையாக மூடப்பட்டு பயனின்றி காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வசதிக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த விளக்கு, தற்போது மரம் மறைத்துள்ளதால் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம், மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
