/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருணாநிதியின் ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது: எல்.முருகன்
/
கருணாநிதியின் ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது: எல்.முருகன்
கருணாநிதியின் ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது: எல்.முருகன்
கருணாநிதியின் ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது: எல்.முருகன்
ADDED : ஏப் 02, 2024 05:33 PM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், பா.ஜ., தேர்தல் பணிமனை அலுவலகத்தை, நீலகிரி தொகுதி வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரம் அனைத்தும், கருணாநிதி ஒப்புதலுடன் தான் நடந்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, சென்னையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், அப்போதைய தமிழக தலைமை செயலாளர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், செயலாளர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர். அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உரிய ஆதாரங்களுடன் விளக்கி காட்டினார். 2004 முதல் 2014ம் ஆண்டு வரை, 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முழு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். அதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி அரசு தான். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால், இன்று வரை நமது தமிழக மீனவர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே மீனவர்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

