/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் சாலையோர ஆபத்தான மரங்கள்; பருவமழைக்கு முன் அகற்றினால் பயன்
/
கூடலுார் சாலையோர ஆபத்தான மரங்கள்; பருவமழைக்கு முன் அகற்றினால் பயன்
கூடலுார் சாலையோர ஆபத்தான மரங்கள்; பருவமழைக்கு முன் அகற்றினால் பயன்
கூடலுார் சாலையோர ஆபத்தான மரங்கள்; பருவமழைக்கு முன் அகற்றினால் பயன்
ADDED : மே 23, 2025 06:48 AM

கூடலுார் : 'கூடலுாரில் பருவமழை துவங்க உள்ள நிலையில், அரசு துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்கள், முட்புதர்கள் அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார், பந்தலுார் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கும் பருவமழை அக்., நவ., வரை தொடரும். ஆண்டுதோறும் பருவமழையின் போது சாலையோரங்களில் மண் சரிந்தும், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதனை தடுக்க நடப்பு ஆண்டு, பருவ மழைக்கு முன் அரசு துறையினர், சாலைகளை ஆய்வு செய்து, மிகவும் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு கிளைகளை அகற்றவும், சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, சாலை ஓரங்களில் மழை நீர் கால்வாய் அமைக்க ஏற்கனவே உள்ளூர் மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அடுத்த வாரம் பருவமழை துவங்க உள்ள நிலையில், இதற்கான பணிகள், இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், கூடலுாரில் இருந்து பிரிந்து செல்லும் கோழிக்கோடு சாலை தேவர்சோலை சாலை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், செடிகள் முட்புதர்கள் வளர்ந்து வாகன போக்குவரத்துக்கு, இடையூறாக உள்ளது. சாலை ஓரங்களில் மழை கால்வாய்களும் அமைக்கப்படவில்லை. இதனால், பருவ மழையின் போது சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடையும் ஆபத்து உள்ளது.
இதனைத் தவிர்க்க, அரசு துறைகள் ஒருங்கிணைந்து, சாலை ஓரங்களில் ஆய்வு செய்து, ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு, அதன் கிளைகள் அல்லது மரங்களை அகற்ற உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில்,'கூடலுாரில் முக்கிய சாலை ஓரங்களில் மழைநீர் கால்வாய் இல்லை. சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையோரங்களில் மழைநீர் கால்வாய் இல்லாததால், சாலை சேதமடையவும், மண்சரிவு ஏற்படவும் ஆபத்து உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.